--- --:--:-- --

நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்..!

5

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

மொத்தமுள்ள 21 மாநகராட்சிகள், 350 நகராட்சிகள், 17 மாநகராட்சிகள், 110 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை இட ஒதுக்கீடு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

 

புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்து அவற்றின் எல்லைகளை வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்த நிலையில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon