10,12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்..!
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் மாணவர்கள் தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாணவிகள் அச்சம் கொள்ளாமல் செல்ல வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மீது தவறு உறுதி செய்யப்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.






