--- --:--:-- --

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

3.1

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும், ஏனைய தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

மேலும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெப்ப நிலையைப் பொறுத்தவரை, உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட சற்று உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon