உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீனா!
உசைன் போல்ட்டின் 100 மீட்டர் உலக சாதனையை முறியடித்து சீனாவின் மனித உருவ ரோபோ சாதனை படைத்துள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில் 2ஆவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. 16 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 56 ரோபோக்கள் பங்கேற்றுள்ளன.
தொடக்க விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் தகுதிச்சுற்றில், சீனாவின் Tiangong ரோபோ 39.7 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து முதலிடம் பிடித்தது.100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் Tianzhuo என்ற ரோபோ உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்தது. 2009ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தொலைவை உசைன் போல்ட் 9.58 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்.
இந்நிலையில், இந்த ரோபோ வெறும் 9.39 விநாடிகளில் கடந்து அசத்தியது. மனிதர்களுடன் போட்டியிடும் வகையில் ரோபோக்களின் திறன் வேகமாக வளர்ந்து வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





