--- --:--:-- --

தவெக ஆட்சி அமைக்க முதலில் ஆதரவு கொடுத்தது காங்கிரஸ் தான்..!

01

வெக ஆட்சி அமைக்க முதலில் ஆதரவு தந்தது காங்கிரஸ் தான் என்றும் அமைச்சர்கள் அதனை மறந்துவிடக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தியா கூட்டணி ஏப்ரல் மாதம் வரை நடந்து கொண்டிருந்தது. மே மாதம் பிறகு ஒரு கட்சி இந்தியா கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டது. அவர்களை தொடர்ந்து தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் அமைதியாக வெளியேறிவிட்டன.

 

 

தற்போது 23 கட்சிகள் இந்தியா கூட்டணியில் தொடர்கின்றன. தவெகவுக்கு எப்போது எம்.பிக்கள் வருகிறார்களோ, அப்போது நாங்கள் அவர்களை இந்தியா கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். எம்.பி.க்களே இல்லாத தவெகவை எப்படி இந்தியா கூட்டணில் தற்போது இணைக்க முடியும்.

 

விஜயை பொறுத்தவரை 106 இடங்கள் கிடைத்ததும், அவரை முதலில் தொடர்பு கொண்டு பேசியது ராகுல்காந்தி. தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தியிடம் ஆதரவு கேட்டார் விஜய். தவெகவின் இன்றைய அமைச்சர் அது நன்றாக தெரியும். அவர்கள் அமைச்சர் ஆவதற்கும், ஆட்சி அமைப்பதற்கும் முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் கட்சி.

 

 

இல்லாவிட்டால், அமித்ஷா அவர்களின் ஆட்சியை வர விடாமல் செய்திருப்பார். கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியிருப்பார். இந்த நிலை அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்ற தேர்தல் வரட்டும், விஜய் சரியான முடிவை எடுப்பார்” என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon