--- --:--:-- --

பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார்..!

5.1

பிரபல ஹிந்தி நடிகர் ஆசிப் பாஸ்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகராக திகழ்ந்த ஆசிப் பாஸ்ரா தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள ஓய்வு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

1998 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான ஆசிப் பாஸ்ரா பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் ஆசிப் பாஸ்ரா நடித்த வெப்சீரிஸ் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon