--- --:--:-- --

பிரபல நடிகர் தீப் சித்து குறித்து துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் வழங்கப்படும்..!

4

குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் தீப் சித்து குறித்து துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

 

குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன .123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து செங்கோட்டை நோக்கி விவசாயிகளை திருப்பி வன்முறைகளை தூண்டி குற்றம்சாட்டப்பட்டுள்ள பஞ்சாப் நடிகர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

இந்த நிலையில் நடிகர் தீப் சித்து செங்கோட்டையில் மதக்கொடியை ஏற்றிய ஜக்ராஜ் சிங், குர்ஜாத் சிங், குர்ஜன் சிங், உள்ளிட்ட 4 பேரை கைது செய்வதற்கு துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.மேலும், ஜார்ஜ் வீர் சிங், பூட்டா சிங், இக்பால் சிங் ஆகியோர் கொடுத்த துப்பு கொடுத்தால் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon