--- --:--:-- --

கொரொனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள்..!

3

மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார். முன்களப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

 

தஞ்சாவூரில் நான்காயிரத்து 500 பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாவட்டத்தின் முன் களப்பணியாளர்கள் குறைந்தளவிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொரொனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதைப்போலவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இதேபோல் மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon