தண்ணீர் என்று நினைத்து சானிடைசரை குடித்த அதிகாரி ரமேஷ் பவார்..!
மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தில் இணை ஆணையர் ரமேஷ் பவார் தண்ணீர் என நினைத்து சானிடைசரை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முகாமில் 12 குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசரை கொடுத்தது சர்ச்சையானது.
மும்பையில் இன்று சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் அங்கு அதிகாரிகளும் அமர்ந்து இருந்தனர்.
அப்போது மும்பை ஜாய்ண்ட் முனிசிபல் கமிஷனர் ரமேஷ் பவார் அறியாமல் தண்ணீர் என நினைத்து சானிடைசர் பாட்டிலை எடுத்து அதை பருகி விட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள் அதன்பிறகு அவர் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.







