அம்பலமான ஜீவசமாதி நாடகம்!
சிவகங்கை மாவட்டத்தில் முதியவரை வைத்து ஜீவசமாதி நாடகமாடி நன்கொடை வசூலித்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மக்களிடம் உள்ள மத நம்பிக்கையை வைத்து திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு நடத்தப்பட்ட சாமியார் நாடகம் சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த 71 வயதான இருளப்ப சுவாமி தீவிர சிவ பக்தர் ஆவார். அப்பகுதியில் சிலருக்கு அருள்வாக்கு கூறி வந்த அவர் ஜீவசமாதி அடைவதே தனது விருப்பம் என நண்பரிடம் கூறியதாக தெரிகிறது.
இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதை அடுத்து அதனை வைத்து காசு பார்க்க அவரது மகன் கண்ணாயிரம் உள்ளிட்டோர் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி தனது தந்தை ஜீவ சமாதி அடையப் போவதாக கூறி நண்பர்களுடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதமே நன்கொடை வசூல் செய்த கண்ணாயிரம் தந்தையை ஜீவசமாதி செய்து அந்த இடத்தை ஆலயமாக்கி காசு பார்க்கவும் துணிந்து உள்ளான். இந்த திட்டத்தை தான் கடந்த 12ஆம் தேதி அவர்கள் செயல்படுத்தி உள்ளனர்.
10 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட குழிகளை வெட்டி இருளப்ப சுவாமி அதன் அருகில் அமரவைத்து பூஜைகளும் நடைபெற்றன. லிங்கத்துடன் அமர்ந்துள்ள இருளப்பசாமியும் தான் ஜீவசமாதி பெறப்போவதாக நம்பி அமர்ந்துள்ளார். புராண கதைகளில் மட்டுமே அறிந்துள்ள ஜீவசமாதியை நேரில் காண ஏராளமானோர் அங்கு திரண்டனர் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மாவட்ட துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நிகழ்வை கண்காணித்தனர்.
வெகு நேரம் சென்றபின் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர்கள் ஜீவசமாதி வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டதாக கூறி பக்தர்கள் கூட்டத்தை கலைத்தனர்.இந்நிலையில் ஜீவசமாதி அடைய போவதாக கூறி மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை பெற்று மோசடி செய்ததாக முருகேசன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் இருளப்ப சுவாமி என் மகன் கண்ணாயிரம் அவரது நண்பர்களுக்கு அண்ணன் ஆனந்த் ஆகியோரையும் கைது செய்தனர்.
சுமார் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் மக்கள் தொகையுடன் லட்சுமணன் கர்ணன் ஆகியோர் தப்பி ஓடி விட்டதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






