--- --:--:-- --

மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த வீடியோவால் பரபரப்பு..!

9

சென்னையிலிருந்து தஞ்சைக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் கல்லணை கால்வாயில் குளித்த போது ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

 

சென்னையில் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் மாணவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தஞ்சைக்கு சுற்றுலா வந்தனர். கல்லணை கால்வாயில் குளித்துள்ளனர். இந்த நிலையில் குளித்துக்கொண்டிருந்த நிதர்சன் நீரில் மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

 

நிதர்சன் தண்ணீரில் குளிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நிதர்சனை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் சடலம் கரையொதுங்கியுள்ளது. உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon