--- --:--:-- --

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன்..!

8

சேலம் அருகே மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் நாடகம் ஆடுவதாக இறந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த தம்பதியருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

 

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மனைவியை சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்த கணவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்து விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Right Menu Icon