திடீரென கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 13 ஆடுகள்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நெடுஞ்சாலையில் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 13 ஆடுகள் பரிதாபமாக பலியாகின. கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோரி. இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவனது ஆடுகள் மேய்ச்சலுக்காக வந்த போது தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. அப்பொழுது கார் மோதிய விபத்தில் 13 ஆடுகள் பரிதாபமாக பலியாகின.






