சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு திடீர் உடல் நல கோளாறு..!
நிமோனியா காய்ச்சலால் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடும் நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.





