கூட்டணி எம்.எல்.ஏ இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளைச் செய்தது திராவிட மாடல் அரசு – உதயநிதி பிரசாரம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில், கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: “பாப்பிரெட்டிப்பட்டியில் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ இல்லாவிட்டாலும், அரசுப் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு அரங்கம், சாலை வசதிகள், சுற்றுலா மேம்பாடு என பல திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றித் தந்துள்ளது.
இதுவே, தி.மு.க வேட்பாளர் பழனியப்பன் இம்முறை வெற்றிபெற்றால், அவர் மக்களின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவார். இதை நான் உறுதியாக சொல்கிறேன்.” என்று பேசினார்.





