கழிவறையில் பயன்படுத்தப்படும் டிஸ்யு பேப்பர் திருடியவனை தரதரவென இழுத்து செல்லும் ஊழியர்கள்!
இங்கிலாந்தில் உள்ள கடையில் கழிப்பறைக்கு பயன்படுத்தும் டிஸ்யு பேப்பரை திருடியவரின் கால்களை பிடித்து காவலர்கள் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. வடக்கு லண்டன் பகுதியில் கொரொனா பாதிப்பால் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில் வணிக வளாகத்திற்கு சென்ற ஒருவர் அங்கிருந்த கடையில் கழிப்பறைக்கு பயன்படுத்தும் டிஸ்யு பேப்பரை திருடியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டுபிடித்த காவலர்கள் அவரின் காலை பிடித்து தரதரவென கடைக்கு வெளியே இழுத்து சென்றனர். கடை ஊழியர்களின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .ஆனால் அந்த நபர் தொடர்ந்து தங்கள் கடையில் திருடி வந்ததாகவும் தற்போது தான் சிக்கியதாகவும் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு மாகாண ஆளுநர்கள் அதிருப்தி தெரிவித்தனர் . கொரொனா பாதிப்பால் அமெரிக்கா உயிர் இழப்புகளையும் பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது. கொரொனா பாதிப்பால் கோடிக்கணக்கான பேர் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முனைப்பு காட்டி வருகிறார்.
இந்நிலையில் வரும் மாதங்களில் பொருளாதாரங்களை மீட்டு எடுப்பது குறித்தும் மூன்று கட்டங்களாக ஊரடங்கு தளர்த்துவது குறித்தும் மாகாண ஆளுநருக்கு அதிபர் சில வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே பெரும்பான்மையான மாகாண ஆளுநர்கள் கொரொனா கோரப்பிடியில் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில் ட்ரம்பின் திட்டமிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.







