தனது தாய்க்காக 200 கிமீ பயணம் செய்த நபர்!
பசியால் வாடும் தாய்க்கு அரசின் இலவச பொருட்களை பெற்று தர மதுரையில் இருந்து ஒருவர் தஞ்சை மாவட்டம் தாராசுரத்தில் சைக்கிளில் சென்றார். மதுரையில் ஆட்டோ ஓட்டுனராக உள்ள ஜெயகாந்தன் என்பவர் தாராசுரத்தில் வசிக்கும் தனது 92 வயது தாய்க்கு ரேஷன் பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்காக மாதந்தோறும் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாததால் அவர் நண்பரிடம் சைக்கிளை பெற்று 16 ஆம் தேதி மாலை மதுரையில் இருந்து புறப்பட்டு தாராசுரம் சென்றார். இந்த நிலையில் ஜெயகாந்தன் குறித்து அறிந்த தஞ்சையை சேர்ந்த தன்னார்வலர்கள் அவரை நிறுத்தி விசாரித்து உதவிப் பொருட்களை வழங்கினார். அவற்றைப் பெற்றுக்கொண்ட அவர் தொடர்ந்து தாராசுரத்தில் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.







