ஜன.21 திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பற்றி விவாதம்..?
திமுக தலைமை செயற்குழுவின் அவசரக்கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடைபெற உள்ளது என்றும், கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமுகத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இந்த கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூட்டணி தர்மத்தை திமுக மீறி விட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது தொடர்பாகவும் திமுகவின் தலைமை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





