--- --:--:-- --

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்… ஆநம் கட்சி அமோக வெற்றி

14

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும் சிங்கப்பூரில் விறுவிறுப்பாகவும், கடும் கட்டுப்பாடுகளுடனும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல்பாட்டு கட்சி அமோக வெற்றி 15-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.லீ வொய்ன் லுங் மீண்டும் பிரதமராகியுள்ளார்.

 

ஆசிய-பசிபிக் கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள குட்டி நாடான சிங்கப்பூர் ஒரே ஒரு நகரத்தைக் கொண்ட வளர்ந்த நாடாகத் திகழ்கிறது. சுமார் 50 லட்சம் வசிக்கும் சிங்கப்பூரில், சுதந்திரம் பெற்ற காலம் முதலே மக்கள் செயல்பாட்டுக் கட்சியே ஆட்சி புரிந்து வருகிறது. சிங்கப்பூரை உலகின் தலை சிறந்த வணிக நகரமாகவும், வளர்ந்த நாடாகவும், கடுமையான சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கும் நாடாக மாற்றிய பெருமை மக்கள் செயல்பாட்டு கட்சியை தோற்றுவித்த லீ குவான் யூவைச் சேரும்.

 

சுதந்திரம் 1965 முதல் 2004 வரை சுமார் 40 ஆண்டு காலம் பிரதமர் பதவியை அலங்கரித்த லீ குவான்யூவை சிங்கப்பூரின் தந்தை என்றே மக்கள் போற்றுகின்றனர். தற்போது லீ குவான் யூவின் மகனான லீ வொய்ன் லுங் சிங்கப்பூர் பிரதமராக இருந்து வருகிறார். அவருடைய பதவிக் காலம் முடிவடைய இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், திடீரென தேர்தலை அறிவுத்தார் லீ.

உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதுமே சிங்கப்பூரில் கடுமையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் லீ மேற்கொண்டார். இதனால் சிங்கப்பூரில் தொற்றுக்கு 45 ஆயிரம் பேர் ஆளானாலும் உயிரிழப்பு வெறும் 26 மட்டுமே என்ற அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

 

கொரோனா தொற்றை திறம்பட சமாளித்த காரணத்தால் தனது பதவிக் காலம் முடிய 10 மாதங்கள் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்த நிலையில் நேற்று தேர்தல் நடைபெற்றது. கொரோனா முன்னெச்சர்க்கையாக வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, முகக் கவசம், கையுறை வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் செய்து தேர்தல் விறுவிறுப்பாக நேற்று நடந்து முடிந்தது. உடனடியாக நேற்றிரவே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

 

இதில், மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களில் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்று லீ மீண்டும் பிரதமராக தேர்வாகியுள்ளார். எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆளும் கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றி, கொரோனா தொற்றை திறம்பட சமாளித்த பிரதமர் லீக்கு அந்நாட்டு மக்கள் கொடுத்த பரிசாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon