வைரக் கற்கள் பதிக்கப்பட்ட முகக் கவசம்..!
குஜராத் மாநிலம் வைரங்களுக்கு பிரசித்தி பெற்ற சூரத் நகரில் வைர வியாபாரம் கொரொனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வைர ஆபரணங்களை வாங்க அதிக அளவில் யாரும் வராத சூழலில் வியாபாரிகள் புதிய யுக்தியை கையாண்டனர். செல்வந்தர்கள் கையாள்வதற்காக வைரக்கற்கள் பதித்த முகக் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.
புதிதாக திருமணம் செய்ய உள்ள மணமக்கள் இதுபோன்ற முகக் கவசங்கள் அணிய ஆர்வம் காட்டி வருகின்றனர். திருமணக்கோலத்தில் முகக்கவசம் அணிய நேர்ந்தாலும் அது வைரக்கற்கள் பதித்த ஆபரணம் போன்று இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.







