இதயத்துடிப்பை அளவிடும் ஆப்பிள் வாட்ச் மூலம் முதியவர் உயிர் காப்பாற்றப்பட்டது..!
ஆப்பிள் வாட்ச்சில் உள்ள இதயத்துடிப்பை அளவிடும் சென்சார் மூலம் 61 வயது முதியவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சித்தார்த் என்பவர் தனது தந்தை ராஜேஷ் ஆப்பிள் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர் இரவு நேரங்களில் தனது இதயத்துடிப்பு சீரற்ற வேகத்தில் இருப்பதை அப்ளிகேஷன் மூலம் அறிந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இதய வால்வுகளில் பரிசோதனை பிரச்சனை உள்ளது தெரியவந்தது.
உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டார்.






