சோபா மாடல் அரசின் போலி பிம்பம் சிதைந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
ஆளுங்கட்சி மற்றும் அரசுக்கு எதிராக கழக இளைஞர்கள் கருத்து தெரிவித்தால் காவல்துறையை அனுப்பும் அரசு, அதே நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், நிர்வாகத் திறனற்ற “சோபா மாடல்” அரசின் போலி பிம்பம் இளைஞர்கள் மத்தியில் சிதைந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.





