கொரோனாவுக்கு போட்டியாக வரும் உயிர்க்கொல்லி “எபோலா”
மத்திய ஆபிரிக்க நாடுகளில் கொரொனா வைரஸ் தொற்றினால் இதுவரை 215 பேர் பாதிக்கப்பட்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் ஆபிரிக்காவின் ஆட்கொல்லி நோயான எபோலா அங்கு பரவிவருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கிழக்கு காம்போவின் பெனி என்ற இடத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காய்ச்சல் உள்ளிட்ட சில உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 50 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் சோதனையின்போது அந்த இளைஞருக்கு எபோலா காய்ச்சல் தாக்கி இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உள்நாட்டுப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் எபோலா காய்ச்சலால் கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நோய் தாக்கியதில் சுமார் 2,200 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை உலகத்தில் கண்டறிந்த அவற்றில் அபாயகரமான ஆட்கொல்லி நோய் இதுதான் என உலக சுகாதார மையம் ஏற்கனவே கூறியிருக்கும் நிலையில் இதற்கு தடுப்பு மருந்துகள் குணப்படுத்தும் மருந்துகள் என எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ தொடங்கிய பின் மனிதர்களிடையே நோய் தொற்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.






