--- --:--:-- --

இ-பாஸ் ரத்து,..! மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி..! ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!!

awd

மிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் இ- பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி என பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

மத்திய அரசு அறிவித்தபடி கொரோனா ஊரடங்கை அடுத்த மாதம் 30-ந் தேதி வரை தமிழக அரசும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அநே சமயம் ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது. புதிய தளர்வுகளில் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

 

செப். 30 ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு .ஞாயிறு முழு முடக்கம் இனி இல்லை.

 


தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி.இரவு 8 மணிவரை பக்தர்களுக்கு அனுமதி

 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி .

 

இபாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இனி பொது முடக்கம் இல்லை.

 

செப்டம்பர் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது.

 

சென்னையில் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி.

 


வணிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

 

தமிழகத்தில் இரவு 8 மணி வரை கடைகள் திறக்கலாம்.

 

உணவகங்களில் இரவு 9 மணி வரை பார்சல் சேவை அனுமதி

 

மாவட்டத்திற்குள் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி.

 

திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி . 75 பேர் மட்டுமே பங்கேற்கலாம். திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை.

 

ரிசார்ட்டுகள் கேளிக்கை விடுதிகள், தங்கும் விடுதிகள் திறக்க அனுமதி .

 

சென்னையிலும் பேருந்து சேவைக்கு அனுமதி என்பது உள்ளிட்ட தளர்வுகளை தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon