--- --:--:-- --

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் விறுவிறு…! இன்று 6495 பேருக்கு தொற்று உறுதி..! 94 பேர் உயிரிழப்பு!!

13

மிழகத்தில் மீண்டும் கொரோ பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது: 2-வது நாளாக இன்றும் தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்து 6495 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் கடந்த ஒரு மாதமாகவே ஏற்றம் இறக்கமின்றி ஒரே மாதிரியாக தினசரி பாதிப்பு 6 ஆயிரத்திற்குள்ளும், உயிரிழப்பு 100 என்ற அளவிலும் பதிவாகி வந்த நிலையில் நேற்றும்,இன்றும் 6 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வேகமெடுத்துள்ளது.

 

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று தமிழகத்தில் 6352 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 6495 ஆக உயர்ந்துள்ளது. இதனால்
தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4,22,085 ஆக உயர்ந்துள்ளது.

 

 

இன்று உயிரிழப்பு 94 ஆக பதிவான நிலையில். மொத்த எண்ணிக்கை 7, 231 ஆக உயர்ந்து உள்ளது.

 

சென்னையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்தே பதிவாகி எண்ணிக்கை மேலும் அதிகரித்தே வருகிறது. நேற்று 1285 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 1427 ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்றும் அதிகபட்ச எண்ணிக்கையில் 498 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து செங்கல்பட்டில் 419,சேலத்தில் 326 , கடலூரில் 383 , திருவள்ளுரில் 293, செங்கல்பட்டில் 306 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon