மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம்.. கலப்பாய்வின் முடிவு..!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் எந்த கழிவுகளும் கலக்கவில்லை என ஆய்வு முடிவு வந்ததால் தொட்டியில் இருந்து மீண்டும் குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக கடந்த 25ஆம் தேதி புகாரளித்தனர். அதன் பின்பு அந்த குடிநீர் தொட்டியில் மாதிரி நீர் எடுக்கப்பட்ட திருச்சியில் உள்ள பொது சுகாதாரக் குடிநீர் பகுப்பாய்வு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சோதனையின் முடிவில் தண்ணீரில் எந்தவித கழிவுகளும் கலக்கவில்லை என தெரிய வந்தது. அதிகாரிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிகளில் இருந்து மீண்டும் குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் அந்த குடிநீரை பொதுமக்கள் முன்னிலையில் குடித்து காட்டியதோடு இந்த நீரால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். இதையடுத்து ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கியது.





