--- --:--:-- --

குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்..!

5

சேலத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் 400க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பிஎஸ்சி நர்சிங் படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று மதியம் சாதம் மற்றும் குழம்பு உட்கொண்டுள்ளனர்.

 

நேற்றிரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் 60க்கும் மேற்பட்டோர் தற்பொழுது சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கல்லூரி நிர்வாகம் அங்கு நடத்தப்படும் விதிக்கு உணவு பாதுகாப்பு தர அனுமதி பெறவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon