பஞ்சாப் மாநிலத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு..! மே1-ந் தேதி வரை அமலில் இருக்கும்..! முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவிப்பு!!
ஒடிசா மாநிலத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் மே 1-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அம்ரீந்தர்சிங் அறிவுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல், இந்தியாவிலும் இப்போது வேகமெடுத்துள்ளது. இதனால் ஏப்ரல் 14 – ந் தேதி வரை நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இதைத் தொடர்ந்து நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
இதற்கிடையே பல்வேறு மாநிலங்களும் தன்னிச்சையாக ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட ஆரம்பித்துள்ளன. முதல் மாநிலமாக ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று அறிவித்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக இன்று காலை அம்மாநில முதல்வர் அம்ரீந்தர்தர் சிங் அறிவித்திருந்தார்.
அதன்படி மாலையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜூன் 1-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.பஞ்சாபில் கொரோனா தொற்று 8 பேருக்கு உறுதியாகி உள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







