சிறையிலிருந்து 180 மீட்டர் நீள சுரங்க பாதை தோண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்..!
பெரு நாட்டில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த கைதிகளை தப்ப வைப்பதற்காக சிறையிலிருந்து தோண்டப்பட்ட 180 மீட்டர் நீள சுரங்க பாதையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்நாட்டின் கேஸ்ட்ரோ சிறைச்சாலையில் உள்ள உணவு விடுதியின் பக்கவாட்டில் தோண்டப்பட்ட அந்த சுரங்கப்பாதை சிறையின் அருகாமையில் சுமார் 180 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் முடிவடைகிறது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த கைதிகளை தப்ப வைப்பதற்காகவும் சிறைக்குள் போதைப் பொருட்களை கொண்டு வருவதற்கும் சுரங்கப்பாதை தோண்டப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.






