--- --:--:-- --

புதுச்சேரியில் செவிலியர்கள் 2வது நாளாக போராட்டம்..!

11

புதுச்சேரியில் செவிலியர்கள், மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி காவல் ஆய்வாளர் அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவ பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் போராட்டத்தால் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்குமாறு நோயாளிகளும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon