--- --:--:-- --

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று கேட்க வேண்டாம்..!

6

ரண்டு தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று கேட்க வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

 

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பிற மாநிலங்களிலிருந்து வரும் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி அளித்து கொண்டவர்களிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழை கேட்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு பதிலாக தடுப்பூசியை சாதாரணமாக கொண்டவர்களை மாநிலத்திற்கு அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளின் நடைமுறையைப் பின்பற்றவும் மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon