நேரில் ஆஜராகாத நடிகை மீரா மிதுன்..! என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது..!
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை.
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது குற்றச்சாட்டு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகாரளித்த நிலையில் கண்டனங்கள் குவிந்து வந்தன.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினார். இன்று காலை சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வந்து ஆஜராக கூறியிருந்த நிலையில் இதுவரை ஆஜராகவில்லை.
போலீசார் சம்மன் அனுப்பியும் கண்டுகொள்ளாத மீரா மிதுன் எப்போதும் தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று பதிவு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







