பேருந்தின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு..!
சென்னையில் மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த செட்டிநாடு மருத்துவக் கல்லூரி பேருந்தில் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடிய நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு சேத்துப்பட்டில் இருந்து டி நகர் வந்து கொண்டிருந்தது. நுங்கம்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது பேருந்தின் இடதுபுற பின்பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடின.
சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பேருந்து பின்னர் இடது புறமாக சாய தொடங்கியுள்ளது. இருப்பினும் பதற்றமடைந்த ஓட்டுனர் சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியுள்ளார்.
பேருந்தில் இருந்த மாணவர்கள் 6 பேரும் காயமின்றி தப்பினர். உரிய பராமரிப்பின்றி இருந்ததால் விபத்து நடந்திருக்கக் கூடும் எனக் கூறும் போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.







