--- --:--:-- --

ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

3

திமுக தலைவர்களை விமர்சித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகரில் இருவேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி மு க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

 

இதனை கண்டித்து அருப்புக்கோட்டை எம் எஸ் கார்னர் பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுகவினர் ராஜேந்திரபாலாஜியின் உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

திமுகவினரின் இந்த செயலை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரிலும், அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக மற்றும் அதிமுக வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Leave a Reply

Right Menu Icon