--- --:--:-- --

நடப்பாண்டுக்கான செமெஸ்டெர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும்..!

2

றுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களுக்கும் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றும் அதற்கான கால அட்டவணையை அந்தந்த பல்கலைக்கழகங்கள் விரைவில் வெளியிடும் என்றும் தமிழக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

நடப்பு கல்வியாண்டுக்கான கல்லூரிகள் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு வரலாம் அதாவது கல்லூரிகளுக்கு வந்து ஆசிரியர்கள் மூலம் நேரடியாக பாடங்களைக் கற்கலாம் என அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என குழப்பம் ஏற்பட்டது.

 

கடந்த இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்றது. தமிழக அரசின் கீழ் செயல்படக்கூடிய 13 பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் செமெஸ்டெர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon