சத்தீஸ்கர் மாநிலத்தில் கரடி தாக்கி 4 பேர் பரிதாபமாக பலி..!
சத்தீஷ்கர் மாநிலத்தில் கரடி தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோரியா மாவட்டம் ஆங்குவாய் கிராமத்திற்கு அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து நேற்று புகுந்த கரடி ஒன்று எதிர்ப்பட்ட மக்களை தாக்கியுள்ளது. கரடியின் தாக்குதலில் மொத்தம் 7 பேர் பலத்த காயமடைந்து உள்ளனர்.
அவர்களில் 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட கரடி தப்பி ஓடிவிட்ட நிலையில் அதை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.







