--- --:--:-- --

இன்று நடைபெறும் திமுக எம்.பி.க்கள் கூட்டம்..!

1

முதலமைச்சரும்,, திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் அந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெறும் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை திமுக எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர்.

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில்தொடங்க உள்ள நிலையில் திமுக சார்பில் இரு அவைகளிலும் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

 

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற உடனடியாக மசோதா, தமிழக மழை வெள்ள பாதிப்பு களுக்கு அதிக நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon