--- --:--:-- --

நியூயார்க்கில் வெளியிடப்பட்ட இசைஞானியின் புகைப்படம்..!

2

நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக இளையராஜாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் காலத்தால் அழியாதது.

 

அதிலும் 80, 90களில் அவரது இசை ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் விளையாடியது. இவரது இசையமைப்பில் வரும் பாடல்கள் எல்லாம் ரசிகர்களை எப்பொழுது மெய்மறக்க வைக்கும். இளையராஜா எத்தனை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு இருக்கிறார்.

 

அதன் தொடர்ச்சியாக இளையராஜாவின் புகைப்படம் டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து உற்சாகம் அடைந்த ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

Right Menu Icon