--- --:--:-- --

8 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர்..!

7

தூத்துக்குடி அருகே 8 வயது சிறுமிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர். எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

ஆனால் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் புகாரளித்த குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon