--- --:--:-- --

சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

8

2023 -2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் இன்று காலை தாக்கல் செய்ய உள்ளார்.

 

2023 – 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக விவசாயிகள், உலக உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண், விஞ்ஞானிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைவு பொருள் ஏற்றுமதியாளர்கள் என பல தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

 

ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. வேளாண் பட்ஜெட் குறித்து தமிழகம் முழுவதும் கருத்துக்கள் கேட்கப்பட்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon