இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு..பிளஸ் 1 மாணவன் பலி..!
நாமக்கல் அருகே சக மாணவனால் தாக்கப்பட்ட அரசு பள்ளி மாணவன் பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. நாமக்கல் அடுத்த எருமைப்பட்டி அருகே நவனப்பட்டியைச் சேர்ந்தவரும் வாகன ஓட்டுனர் ரமேஷ் என்பவரின் மகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இவனுக்கும் இவனுடன் படித்து வந்த சக மாணவரான எருமைப்பட்டி அருகே உள்ள சென்னியம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியின் மகன் ரமேஷின் மகனை தாக்கியதில் பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





