--- --:--:-- --

மாணவர்களை இழிவாக பேசி அடிக்கும் தலைமை ஆசிரியர்..!

5

லைவாசல் அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் தங்களை தரக்குறைவாக பேசி அடித்து துன்புறுத்துவதாக மாணவ மாணவிகள் குற்றம் சாட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய குழு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் திருமுருகவேல் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இவர் பள்ளி மேலாண்மை குழு தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

 

இந்த நிலையில் பள்ளியில் தொடர்ந்து மாணவ மாணவிகளை அடித்து துன்புறுத்துவதாகவும் அநாகரிகமாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இது இது தொடர்பாக வட்டார கல்வி அதிகாரி நந்தகுமார் பள்ளியில் விசாரணை நடத்தியுள்ளார்.

 

தலைமை ஆசிரியர் தங்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாணவிகள் கூறும் வீடியோ இணையத்தில் வைர ல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon