--- --:--:-- --

நடுவானில் திடீரென வந்த வலி..கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம்..!

3

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் இருந்த கர்ப்பிணி பயணிக்கு பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு கடந்த 2ஆம் தேதி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

 

உடனடியாக அது குறித்து அந்த பெண்ணிடம் குடும்பத்தினர் விமான பணிப்பெண்களிடம் தெரிவித்ததையடுத்து விமானத்தில் இருந்து ஆண் பயணிகள் அனைவரையும் ஒரு பகுதிக்கு இடம் மாற்றிவிட்டு ஒரு ஆண் செவிலியர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.

 

பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை பார்த்த பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். விமானம் சென்னை மாநிலத்தில் தரை இறங்கியதும் அங்கு தயாராக இருந்த விமான நிலையம் மருத்துவக் குழுவினர் விமானத்திற்குள் சென்று தாயையும் குழந்தையையும் பரிசோதித்தனர்.

 

தாயும், சேயும் நலமுடன் இருந்ததை தொடர்ந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Right Menu Icon