--- --:--:-- --

துறையூர் ஒன்றியக் குழு கூட்டத்தில் தர்ணா போராட்டம்..!

9.1

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்ற போது 4 ஒன்றிய உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 2022- 23ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து பங்குத் தொகை வழங்குவதைக் கண்டித்தும், எழுது பொருள்கள், காகிதங்கள் தண்ணீர் கேன் வாங்கியது, கணினி பழுது நீக்கம் உள்ளிட்ட அலுவலக செலவினங்கள் தொடர்பாக தன்னிச்சையாக லட்சக்கணக்கில் நிதி செலவிட்டு மாவட்ட ஆட்சியர் வாய் மொழி உத்தரவு படி செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

 

அலுவலகம் சார்பில் கூட்டத்தில் பதில் கூறியதால் ஒன்றிய குழு உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் கூட்டத்தின் முன்பகுதியில் அமர்ந்து திமுக ந. அசோகன், அதிமுக இந்துமதி, சின்னம்மா, தேமுதிக சிவகுமார் ஆகிய 4 பேரும் தர்ணா செய்தனர்.

துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக செலவினங்கள் மற்றும் நிதி திட்டங்களுக்கு ஒன்றிய குழு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கியதை கண்டித்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது துறையூர் ஒன்றிய குழு அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Right Menu Icon