--- --:--:-- --

கட்டணம் செலுத்தவில்லை என முதியவரை கட்டிப்போட்ட மருத்துவமனைக்கு சீல் வைப்பு!

12

சிகிச்சைக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி 80 வயது முதியவரை கட்டிலில் கட்டிப் போட்ட மத்தியபிரதேச மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்குள்ள சாஜபூர் மருத்துவமனையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட 80 வயதான லக்ஷ்மிநாராயணன் சேர்க்கப்பட்டார்.

 

சிகிச்சைக்காக அவரது குடும்பம் 11 ஆயிரம் ரூபாய் செலுத்தியது. ஆனால் மேலும் 11 ஆயிரத்து 720 ரூபாய் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியது. ஆனால் வறுமை காரணமாக குடும்பத்தினரால் அதை செலுத்த முடியவில்லை.

 

முதியவரை டிஸ்சார்ஜ் செய்யுமாறு குடும்பத்தினருக்கு கெஞ்சியதை ஏற்க மறுத்ததுடன் முதியவர் தப்பித்து விடக்கூடாது என்று அவரை மருத்துவமனை ஊழியர்கள் படுக்கையோடு சேர்த்து கட்டி போட்டனர். முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் கவனத்திற்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டதும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon