குட்டி குரங்கை வேட்டையாடமல் அதனுடன் விளையாடும் சிறுத்தை!
தென் ஆப்பிரிக்காவில் குரங்கு குட்டி ஒன்றுடன் சிறுத்தை விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது. பொட்ஸ்வாணாவில் ஓஹோவாங்கோ என்ற இடத்தில் கீழே விழுந்து கிடந்த குரங்கு குட்டியை சிறுத்தை ஒன்று தனது வாயால் மென்மையாக கவ்வி அருகில் முறிந்து கிடந்த மரக் கிளையில் அமர வைத்தது.
சின்னஞ்சிறு குரங்கு குட்டியை சிறுத்தை கொல்லாமல் மாறாக அதனுடன் விளையாடியதை ஜெர்மனியை சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் தாமஸ் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். மீட்க வரும் பெரிய குரங்கை அடித்து உணவாக்க குட்டியை இரையாக சிறுத்தை முன்னிலைப்படுத்தி இருக்கலாம் என தாமஸ் விளக்கமளித்துள்ளார்.







