டெல்லி CM விரைவில் கைது செய்யப்படலாம்: கெஜ்ரிவால்
டெல்லி CM அதிஷி விரைவில் போலி வழக்கில் கைது செய்யப்படலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மகிளா சம்மன் யோஜனா, சஞ்சீவனி யோஜனா போன்ற நலத்திட்டங்களால் சிலர் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், இதனால் அவர்கள் அடுத்த சில நாட்களில் அதிஷியை புனையப்பட்ட வழக்கில் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு முன், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் இடங்களில் சோதனை நடத்தப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.





