--- --:--:-- --

திருப்பூரில் Dedicated Beat System என்கிற ரோந்து முறை இன்று அறிமுகம்..!

3

திருப்பூர் மாநகரில் Dedicated Beat System என்கிற ரோந்து முறை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.லட்சுமி இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் வடக்கு மாவட்டத்தில் 12 பீட்டுகள் மற்றும் தெற்கு மாவட்டத்தில் 10 பீட்டுகள் என மொத்தம் 22 பீட்டுகள் இயங்கும்.

 

ஒரு பீட்டுக்கு இரண்டு காவலர்கள் என 44 காவலர்கள் 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட்களாக சுழற்சி முறையில் பணிபுரிவார்கள். பொதுமக்களிடமிருந்து வரும் புகார் சம்மந்தமாக நேரில் சென்று விரைந்து விசாரணை மேற்கொண்டு தீர்வு காணுதல், தங்களது சரக எல்லைக்குள் எந்தவித குற்ற சம்பவங்களும் மற்றும் சட்ட விரோத செயல்களும் நடைபெறாமல் கட்டுப்படுத்துதல் போன்றவை Dedicated Beat முறையின் முக்கிய நோக்கமாகும்.

 

ரோந்து காவலர்கள் ரோந்து சுற்றிய நேரம் போக மீதி நேரங்களில் தங்களுக்கான புறக்காவல் நிலையங்களில் இருப்பார்கள். பொதுமக்கள் புறக்காவல் நிலையம் சென்றும் தங்களது புகார்களை தெரிவித்து தீர்வு காணலாம். அவசர உதவிக்கு பொதுமக்கள் தங்களது பகுதி பீட் அலுவலரின் அலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு புகாரளித்து பயன்பெறலாம்.

 

1. மாஸ்கோ நகர் – 8925961490

2. புதிய பேருந்து நிலையம் – 8925961491

3. கருணாகரபுரி – 8925961492

4. குளத்துபாளையம் – 8925961493

5. AVP கல்லூரி நான்கு ரோடு சந்திப்பு – 8925961494

6. வலையங்காடு – 8925961495

7. SAP சந்திப்பு – 8925961496

8. VIII ஸ்ரீநகர் – 8925961497

9. போயம்பாளையம் – 8925961498

10. பாண்டியன்நகர் – 8925961499

11. அம்மாபாளையம் – 8925961500

12. கணியாம்பூண்டி – 8925961501

தெற்கு காவல் மாவட்டத்தில் உள்ள பீட்டுகள்

 

1. பெரியதோட்டம் – 8925961502

2. சந்திராபுரம் – 8925961503

3. சந்தைபேட்டை – 8925961504

4. கொடிக்கம்பம் – 8925961505

5. பெரியாண்டிபாளையம் – 8925961506

6. கோவில்வழி – 8925961507

7. நல்லூர் – 8925961508

8. காசிபாளையம் – 8925961509

9. TKT மில் – 8925961510

10. முருகம்பாளையம் – 8925961511

Right Menu Icon