--- --:--:-- --

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு

2

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு அதிகாரம் அளிக்க உள்ளது. போலி வாக்காளர்கள் இரண்டு அட்டைகள் வைத்திருப்பவர்களை கண்டு பிடிக்க ஏதுவாக வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் விடுத்திருந்தது.

 

மத்திய சட்ட அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக விரைவில் தனி திருத்த சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.

 

இந்த சட்டத்திருத்தம் செய்ததன் மூலம் ஏற்கனவே வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களிடமோ அல்லது புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோரிடமோ தேர்தல் அலுவலர் ஆதார் எண்ணை கேட்டு பெற இயலும்.

Leave a Reply

Right Menu Icon