--- --:--:-- --

வரதட்சணை கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட இளம்பெண் தற்கொலை..!

8

முன்னேறிய சமூகமாக நம்மை கூறிக்கொண்டாலும் திருமணமாகி கணவன் வீட்டுக்கு செல்லும் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு உட்படுத்தப்படுவது தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அத்திப்பாடி பகுதியை சேர்ந்த அத்தியப்பன் – உதய நிலா தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

 

இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு தாய் வீட்டிலிருந்து இரண்டு ஏக்கர் நிலம் வரதட்சணையாக வாங்கி வரவேண்டும் என கொடுமைப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

எனவே அந்தப் பெண் தற்கொலை கணவர் ஆத்தியப்பன் மற்றும் அவரது பெற்றோர் தான் காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

மதுரை செல்லூர் தத்தனேரி சேர்ந்த சையத் அலி என்பவருக்கு சல்மா என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் 5 சவரன் நகையை கேட்டு மாமியார் மாமனார் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் வீட்டிலிருந்தே சல்மா மீது நான்கு பேரும் ஆசிட் ஊற்றிய தாகக் கூறப்படுகிறது. உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இது தொடர்பான புகாரின் சல்மாவின் மாமியார் மற்றும் காவல்துறையினரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மாமனார் அப்துல்லா மற்றும் அவரது மகளைத் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon